- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
நாரண ஹரி ஹரி
நரஹரி ஹரி ஹரி
ஆனந்த ஹரி ஹரி
பத்மா பிரிய ஹரி
கேசவ ஹரி ஹரி
கேசிஹா ஹரி ஹரி
ஸ்ரீ ராம ஹரி ஹரி
சீதாராம ஹரி ஹரி

கோவிந்த ஹரி ஹரி
கோபால ஹரி ஹரி
கதி நீயே ஹரி ஹரி
பரமாத்ம ஹரி ஹரி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்
மண் உன்னும் மழலையில் மகிழ்கிறேன்
சல்லென சகடனை உதைத்த திருவடியில் திகழ்கிறேன்
பாலருந்தி பூதனையை மாய்த்த
மாதவனை மனதிலே தொழுகிறேனடா
நல்நாகம் மீதேறி ஆடிய நடனத்தில் நெகிழ்கிறேன் நாராயணா!
தசரதன் மகனே இராமா
தாரகமே உன் நாமா
தவமின்றி இராமநாமம் உரைத்து உரைத்து
உய்ந்தவர்களுண்டு உலகிலுன் பதமடைந்தவர்களே
பாதகங்களகன்றே பணிந்தேத்தினார்களே பரந்தாமா
பாமரர்களின் ஆபத்தாண்டாவா பல்லாண்டு பல்லாண்டு
ஆலினிலையில் அனாயசமாய்
ஆழிமழையில் நியே
ஆண்டாளின் அமுதனே
ஆழியேந்தி மிளிரும் மின்னலே
ஆலங்கட்டி கருணைபொழியும்
ஆராவமுதனே
ஆலவட்டம் விரும்பும் வரதனே
ஆலிங்கனம்தான் அனுமனுடன்
ஆனந்தவல்லி நாயகனே
மங்களம் மங்களம்
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}