விஜயவாடா: காமெடி ஜாம்பவான் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் நடித்த வெங்கல் ராவ் தற்போது கல்லீரல் பாதிப்பால் விஜயவாடா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனக்கு சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு நடிகர் நடிகைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடியில் உச்ச நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவருடன் பல்வேறு காமெடி நடிகர்கள் சிறு சிறு வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் பலர் புகழ்பெற்று தனிக் காமெடியனாக மாறினர்.. உதாரணம் தம்பி ராமையா. ஒரு சிலரோ அவர்களின் இருந்த இடமே தெரியாமல் நலிந்து போய் விட்டனர். காரணம், வடிவேலு அதிக படங்களில் நடிப்பதில்லை என்பதால் இவர்களும் கூட மெல்ல மெல்ல பொலிவிழந்து போய் விட்டனர்.

அந்த வரிசையில் வடிவேலுவுடன் 30 படங்களுக்கு மேலாக நடித்தவர் காமெடி நடிகர் வெங்கல் ராவ். இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரு சண்டை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி, 25 வருட காலமாக ஸ்டண்ட் நடிகராக வலம் வந்தவர். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு டூப் போட்டு சண்டைக் காட்சிகளில் பணியாற்றியவர். +இதனை தொடர்ந்து ஒரு படத்தில் சண்டைக்காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால், காமெடி நடிகராக தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியவர்.
வடிவேலுவுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் காமெடி செய்துள்ளார். அத்தனை படங்களிலும் வெங்கல்ராவுக்கு சூப்பரான ரோல் கொடுத்திருப்பார் வடிவேலு.. எல்லாப் படங்களிலும் இவர்களது காமெடி கூட்டணி ஹிட்டடித்தது. சில ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இருந்த வெங்கல் ராவ் சமீபத்தில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு மீண்டும் வாய்ப்பு கொடுத்து கை கொடுத்தார்.
இந்த நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக, ஒரு கை கால் செயலிழந்து விஜயவாடா அரசு மருத்துவமனையில் தற்போது வெங்கல் ராவ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தனக்கு சிகிச்சை செய்ய பண உதவி செய்யுமாறு வெங்கல் ராவ் நடிகர் நடிகைகளிடம் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
எனது ஒரு கை கால் செயலிழந்து விட்டது. என்னால் நடக்க முடியவில்லை. சரியாக பேச முடியவில்லை. சிகிச்சை செய்ய என்னிடம் பணம் இல்லை. அதனால் சினிமா நட்சத்திரங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}