சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கே.சுப்பராயன், நாகப்பட்டனம் தனி தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுவார் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டனம் (தனி) மற்றும் திருப்பூர் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று கட்சி தலைமை அறிவித்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன், அகில இந்திய செயலாளர் நாராயணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நாகப்பட்டனத்தில் வை செல்வராஜை நிறுத்துவது என்றும், திருப்பூரில் மீண்டும் சுப்பராயனே போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசன் எம்.பியும், திண்டுக்கல்லில் சச்சிதாந்தனும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகள் சார்பில் தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}