காங்கிரஸின் 39 வேட்பாளர்கள் .. 50க்குக் கீழே 12.. 60க்கு மேலே 12 பேர்.. 70க்கும் மேலே 7 பேர்!

Mar 09, 2024,08:09 PM IST

டெல்லி: காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அந்தக் கட்சி வேட்பாளர்களையும், பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பலர் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.


சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மொத்தம் 195 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.




தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் 34 பேருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. மொத்தம் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் பெண்கள் ஆவர். எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 27 பேர். 57 பேர் ஓபிசி எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். 50, 60, 70 வயதுக்கு மேற்பட்டோர் எத்தனை பேர் என்ற விவரத்தை பாஜக சொல்லவில்லை.


பாஜகவின் முதல் வேட்பாளர்கள் பட்டியலில் அனுபவம் வாய்ந்தவர்களும், புதியவர்களும் கலந்து உள்ளனர். கடந்த முறை ஜெயித்த பலருக்கு இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை. அந்தக் கட்சியில் ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.  மறுபக்கம் காங்கிரஸ் கட்சியில் 2 முஸ்லீம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.


மறுபக்கம் காங்கிரஸ் கட்சி 6 மாநிலங்களைச் சேர்ந்த 39 வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.  இதில் 15 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 24 பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள். 12 பேர் 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். 8 பேர் 50 டூ 60 வயதுக்குட்பட்டவர்கள். 12 பேர் 60வயதுக்கு மேல் உள்ளவர்கள். 7 பேர் 70 வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் ஆவர்.


காங்கிரஸ் வேட்பாளர்கள் 39 பேரில் 27 பேர் 50 வயத்துக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி பழம்பெறும் கட்சி என்பதாலும், இங்கு நீண்ட காலமாக கட்சியில் இருப்பவர்கள் அதிகம் என்பதாலும், வயதானவர்கள் அதிக அளவில் தேர்தலில் போட்டியிடுவது வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்