சென்னை: நடிகை குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது. தலித் மக்கள் பேசும் மொழியை தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுபடுத்தி பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கட்சி இன்று மாலை 5 மணி வரை கெடு விதித்துள்ளது. இதையடுத்து குஷ்பு வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மன்சூர் அலிகானுக்கு அடுத்து சர்ச்சை பேச்சில் சிக்கியுள்ளார் குஷ்பு. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மற்றும் நடிகையுமான குஷ்பு, மன்சூர் அலிகான் குறித்து பேசப் போய் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சில் சிக்கினார். மன்சூர் அலிகானுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல குஷ்புவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பலரும் குஷ்புவுக்கு பதில் கொடுத்தனர். குறிப்பாக மணிப்பூர் விவகாரத்தில் குஷ்பு எங்கே போனார், அனிதா மரணத்தின்போது எங்கே போனார்.. என்றெல்லாம் அவர்கள் கேட்டனர். இதையடுத்து உங்களது "சேரி பாஷை"க்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறியிருந்தார் குஷ்பு.

இது கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. குஷ்புவின் "சேரி" வார்த்தை பிரயோகத்திற்கு இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், விடுதலைச் சிறுத்தைகள், பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இவர்களில் ஒரு படி மேலே போன காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை குஷ்பு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சம் பேரைத் திரட்டி குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம் என்று எச்சரித்தது.
அவர்களது கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குஷ்பு வீட்டின் முன்பு பெருமளவிலானோர் திரண்டு போராட்டம் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது குஷ்பு வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான போலீஸார் அந்தத் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
குஷ்பு மீது போலீஸில் புகார்

இதற்கிடையே, குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விசிக துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என்று சொல்லி பதிவிட்டது என்னையும் நான் சார்ந்திருக்கின்ற தலித் மக்களையும் காயப்படுத்தியுள்ளது.
2000 ஆண்டு காலமாக எமது மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் பேசுகின்ற மொழியை கேவலப்படுத்தி உள்ளார். மிகுந்த மனஉளச்சலுக்கும் மனவேதனைக்கும் எனக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் சேரியில் பேசுகின்ற மொழி வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்டத்தகாத மொழி என்றும் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பு மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மன்சூர் அலிகான் பரபரப்பு ஓய்ந்த நிலையில் தற்போது குஷ்பு பரபரப்பு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}