அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

Apr 02, 2025,06:24 PM IST

பெங்களூர்: ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானத்தில் கலப்படம் செய்வதாக  எழுந்த புகாரின் அடிப்படையில், பெங்களூரில் உள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


2025 ஆம் ஆண்டு வழக்கத்தை விட ஏப்ரல், ஜூனில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா,பீகார், மேற்கு வங்காளம், உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலை அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


இதனால் கோடை வெயிலால் ஏற்படும் வறட்சியைத் தடுக்க குளுமையான ஐஸ்கிரீம், குளிர்பானம்,  போன்றவற்றை மக்கள் அதிகம் நாடி செல்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் அதிகம் வாங்கி பருகின்றனர். இந்த பொருட்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருவுக்குத் தெரு என ஐஸ்கிரீம் கடைகளும்,குளிர்பான கடைகளும் பெருகிவிட்டன.இந் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக நான் நீ என்று போட்டா போட்டி கொண்டு விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். மக்களும் தேடி சென்று வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.




இதற்கிடையே பெங்களூரில் உள்ள ஐஸ் கிரீம் மற்றும் குளிர்பான நிறுவனங்கள் சுகாதாரமற்ற நிலையில் தரமற்ற பொருட்களை கொண்டு தயாரிப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 


இந்த ஆய்வின் போது பெங்களூரில் உள்ள 220 கடைகளில், 97 கடைகளில் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்வதாக கூறி   நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  ஐஸ்கிரீமில் சலவைத்தூள் மற்றும் குளிர்பானத்தில் பாஸ்போரிக் அமிலம்  பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் சோப்பு, யூரியா அல்லது டார்ச்சிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பால்,  சுகாதாரமற்ற தண்ணீரை  கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டதும், இயற்கை சர்க்கரைக்கு பதிலாக  சுவைக்காக செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


அதே சமயத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானத்தில் கலக்கப்பட்ட நச்சுத்தன்மை மூலம் பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது பாஸ்போரிக் அமிலத்தின் மூலம் எலும்புகள் பாதிக்கப்படும். சோப்புத்தூளில் உள்ள கார மற்றும் அமிலத்தன்மை குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


இந்த காரத்தன்மை வாய் வழியாக சென்று உணவு குழாய், மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படும். இது மட்டுமல்லாமல் அதிகப்படியான நச்சு தன்மை உடலில் சேர்வதால் சிறுநீரகம், கல்லீரல், மற்றும் நரம்பு மண்டலம் பலவீனப்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்