congratulations CSK.."கப்" வென்ற சென்னை அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

May 30, 2023,10:24 AM IST
டில்லி : ஐபிஎல் 2023 கிரிக்கெட் பைனலில் குஜராத்திற்கு எதிராக போட்டியில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது. ஐபிஎல்.,ல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது.

இதற்காக சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தொடர்ந்து வாழ்த்து கூறி வருவதால் ட்விட்டரில் #Congratulations CSK என்ற ஹெஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. Chennai Super Kings, #MSDhoni, Thala, Sir Ravindra Jadeja போன்ற ஹெஷ்டேக்குகளும் டிரெண்டாகி உள்ளன.



தமிழக முதல்வர் ஸ்டாலின் : தோனியின் தலைமையில் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மஞ்சள் படையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள். இது மிகச் சிறப்பான போட்டி. ஜடேஜா பல துன்பங்களை எதிர்கொண்டு, சிஎஸ்கே.,க்கு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்.

சுந்தர் பிச்சை : சிறப்பான மேட்ச்ல் இதுவும் ஒன்னு. டாடா ஐபிஎல் எப்பவும் சிறப்பு தான். சிஎஸ்கே.,க்கு வாழ்த்துக்கள். குஜராத் அணி இன்னும் அதிக பலத்துடன் அடுத்த ஆண்டு வர வேண்டும்.

குஷ்பு : சென்னைவாசிகளான எங்களால் சிஎஸ்கே கோப்பையை பிடிப்பதை பார்த்து சந்தோஷப்படாமல் இருக்க முடியாது. நம் தலயும் அவர் மீதான அன்பும் ஒப்பிட முடியாதது. தோனி, நீங்க ஜீனியஸ். பெருமையையும், கோப்பையையும் வீட்டிற்கு கொண்டு வந்ததற்கு சிஎஸ்கே இன் ஒட்டுமொத்த சிறப்பான டீமுக்கும் நன்றி.

பாடகர் ஸ்ரீநிவாஸ் : ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என சொல்பவர்கள் இந்த சேட்சை பாருங்கள். இதை எப்படி ஏற்கனவே முடிவு செய்து பண்ண முடியும்?

லோகேஷ் கனகராஜ் : தீதீதீதீதீ....

வெங்கட் பிரபு : இது வரை பார்க்காத பெஸ்ட் பைனல். பெஸ்ட் வெற்றி. லவ் யூ சென்னை ஐபிஎல். ஜடேஜா பெயரை தட்டி சென்று விட்டார். ஐபிஎல் நாங்கள் தான் சாம்பியன்ஸ். இதை விட சிறப்பா யாரும் பெற்று விட முடியாது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்