காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிப்பு

Mar 27, 2026,05:12 PM IST

சென்னை: ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 16 தொகுதிகள் எவை என்பது குறித்த விபரத்தை இன்று வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.


28 தொகுதிகளில் களம் காணும் கைச் சின்னம் :


திமுக கூட்டணியில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸிற்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களைப் போலவே, இந்த முறையும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள மற்றும் காங்கிரஸிற்கு செல்வாக்கு மிக்க தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. திமுக சார்பில் ஏற்கனவே காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டு விட்டதாக சொல்லப்பட்ட நிலையில், நேற்று புதிய தொகுதி பட்டியல் ஒன்றை காங்கிரஸ் டில்லி மேலிடம் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இவற்றை ஆய்வு செய்து, தற்போது புதிய தொகுதிகள் பட்டியல் காங்கிரசிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விபரம் :




1. பொன்னேரி (தனி)

2. வேளச்சேரி (சென்னை மாநகரத்தின் முக்கியப் பகுதி)

3. சோளிங்கர்

4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

5. ஈரோடு கிழக்கு (சமீபத்திய இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதி)

6. உதகை (நீலகிரி மாவட்டம்)

7. மயிலாடுதுறை

8. அறந்தாங்கி

9. காரைக்குடி

10. சிவகாசி

11. திருவாடனை

12. ஸ்ரீவைகுண்டம்

13. நாங்குநேரி

14. குளச்சல்

15. விளவங்கோடு

16. கிள்ளியூர்


முதல் கட்டமாக 16 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 12 தொகுதிகளின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடப்படும் வேட்பாளர்கள் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்