300 சீட்டுல கூட போட்டி போட்டுக்கங்க.. பிடிவாதம் பிடிக்காதீங்க.. காங்.குக்கு மமதா பானர்ஜி அட்வைஸ்!

Jan 23, 2024,05:40 PM IST

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சி 300 சீட்டுகள் வரை லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம். மீதமுள்ள தொகுதிகளை பிற கூட்டணிக் கட்சிகளுக்கு அது கொடுக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி இதில் பிடிவாதம் காட்டி வருகிறது என்று திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மமதா பானர்ஜி கூறியுள்ளார்.


காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு சமீபத்தில்தான் மல்லிகார்ஜூன கார்கே தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது தொகுதிப் பங்கீட்டு பேச்சுக்கள் அங்கு நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாநிலமாக தொகுதிப் பங்கீட்டை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டு இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.




ஆனால் சில முக்கியக் கட்சிகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையே, தொகுதிப் பங்கீடு தொடர்பாக முட்டல் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக சமாஜ்வாடி, திரினமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தங்களது தனிப்பட்ட அஜென்டாவுடன் உள்ளதால் தொகுதிப் பங்கீடு சிக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், மமதா பானர்ஜி காங்கிரஸ் குறித்து குறை கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த அனைத்து மத நல்லிணக்க பேரணியில் அவர் பேசுகையில்,  பிராந்திய கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாஜகவை வலுவாக எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் 300 இடங்கள் கூட போட்டி போட்டுக் கொள்ளட்டும். நான் கூட உதவி செய்கிறேன். அங்கு திரினமூல் காங்கிரஸ் போட்டியிடாது.


இந்தியா கூட்டணியின் கொள்கைக்கு புறம்பாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடந்து வருகிறது. என்னைப் போல யாரும் பாஜகவை நேரடியாக எதிர்ப்பதில்லை. சில பகுதிகளில் பிராந்தியக் கட்சிகள் வலுவாக உள்ளன. அங்கு அவர்களை தனியாக போட்டியிட வேண்டும். அப்போதுதான் வாக்குகளில் பாதிப்பு வராது, பாஜகவை வலுவாக தோற்கடிக்க முடியும்.


இதைச் செய்ய சில கட்சிகள் தயங்குகின்றன, யோசிக்கின்றன. இதுதான் பிரச்சினை என்று கூறியுள்ளார் மமதா பானர்ஜி.


நேற்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய பேரணி நடத்தப்படும் என்று மமதா பானர்ஜி அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்தப் பேரணி நேற்று கொல்கத்தாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்