சென்னை: தமிழ்நாட்டில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால்தான் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வேட்பாளர் பட்டியல் இன்றைக்குள் வெளியாகும் எனவும், காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருப்பதால் கூட்டணி கட்சிகள் விறுவிறுப்பான முறையில் வேலையில் இறங்கி விட்டன. பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. பெரும்பாலான கட்சிகளின் வேட்பாளர்கள் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதியிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதில் 21 தொகுதிகளில் களமிறங்க உள்ள திமுக அதன் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு, அடுத்த கட்டமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. ஏன் இந்த தாமதம் என பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் தர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாராம். இதனால் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் வேட்பாளர் பட்டியலை திருத்தி வருகின்றனராம். இதனால்தான் தாமதம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், கடந்த முறை போட்டியிட்டு வென்றவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}