சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்தில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர்,விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் அந்தந்த கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு மக்களை சந்தித்து மக்களவை தேர்தலுக்குப் பிறகு சாதி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பு நீக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். இந்தப் பாத யாத்திரைக்கு பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் முதல் வாரம் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இந்தப் பிரச்சாரம் குறித்த திட்டப் பணிகளை காங்கிரஸ் தயாரித்து வருகிறது. எந்த தேதியில் பிரச்சாரம்.. எங்கு பிரச்சாரம் மேற்கொள்வது.. என்பது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}