டெல்லி: ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து தேசிய அளவில் "ஜனநாயகத்தைக் காப்போம்" என்ற இயக்கத்தை நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த இயக்கத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம்ர ரமேஷ் கூறுகையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பாக அரசியல் ரீதியான செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம். கட்சி மேற்கொள்ளவுள்ள சட்ட ரீதியான அணுகுமுறைகள் குறித்து அபிஷேக் மனு சிங்வி விவரித்தார். நாடு தழுவிய அளவில் வரும் நாட்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன. இதை வரவேற்கிறோம். அதேசமயம், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு எதிர்க்கட்சியுடனும் பேசி வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. தற்போது நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இது வலுப்படவேண்டும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
முன்னதாக ராகுல்காந்தி தகுதிநீக்கத்தைக் கண்டித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இவர்களில் பலரும் மத்திய பாஜக அரசை "சர்வாதிகார அரசு" என்றும் வர்ணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}