சண்டிகர்: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஜூலானா சட்டமன்ற தொகுதியில் களமிறங்குகிறார்.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது .ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றம் பஜ்ரங் புனியா இருவரும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ஹரியானா சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் தீவிரமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக டெல்லி வீதிகளில் போராடிய மல்யுத்த வீரர்களையும் தேர்தல் களத்தில் காங்கிரஸ் களம் இறக்குகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கே.சி வேணுகோபால் முன்னிலையில் இணைந்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு பஜ்ரங் புனியா பேசுகையில், அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். ஒவ்வொரு போராட்டத்திலும் காங்கிரசுடன் நிற்போம். மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பாஜக பெண் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியிருந்தோம். அவர்கள் யாரும் எங்களுடன் துணை நிற்கவில்லை. ஆனால், காங்கிரஸ் எல்லா இடங்களிலும் எங்களுடன் துணை நின்றது எனப் பேசி இருந்தார்.
அவரைத் தொடர்ந்து வினேஷ் போகத் பேசுகையில், காங்கிரசுக்கு நான் மிகுந்த நன்றி கூறுகிறேன். ஏனெனில் கஷ்ட காலங்களில் மட்டுமே நம்முடையவர் யார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட போது பாஜகவை தவிர அனைவரும் எங்களுடன் இருந்தார்கள். எங்கள் வலியையும் கண்ணீரையும் உங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்கும் ஒரு சித்தாந்தத்துடன் நான் இணைந்து இருப்பதில் பெருமைப்படுகிறேன். மேலும் அவர்களின் உரிமைகளுக்காக தெருவில் இருந்து பாராளுமன்றம் வரை போராட தயாராக இருக்கின்றேன் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியான அகில இந்திய கிசான் காங்கிரஸின் செயல் தலைவராக பஜ்ரங் புனியா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஹரியானா சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் 31 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். அதில் ஜூலானா சட்டசபைத் தொகுதியில் வினேஷ் போகத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹரியான மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி சாம்ப்லா கிலோய் தொகுதியிலும், ஹரியானா காங்கிஸ் தலைவர் உதய் பன், ஹோடல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}