துருக்கியில் எங்களது கிளையா.. அமித் மாள்வியா, அர்னாப் கோஸ்வாமி மீது .. காங்கிரஸ் அவதூறு புகார்

May 21, 2025,10:15 AM IST

பெங்களூரு: துருக்கி நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு கிளை இருப்பதாக கூறி பொய்யான தகவலைப் பரப்பியதாக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாள்வியா மற்றும் ரிபப்ளிக் டிவி தலைமை எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி மீது பெங்களூரு கோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.


லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், காங்கிரஸ் கட்சி குறித்து தவறான செய்தியை மக்களிடம் பரப்பும் வகையிலும் இந்த  பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக அந்தப் புகாரில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.




இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு மூலம் புகார் தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் போட்டுள்ள செய்தியில், கட்சியின் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது. நாட்டு மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தும் வகையிலும், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜனநாயகத்தின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இது. கட்சி குறித்தும், கட்சி தலைவர்கள் குறித்தும் தவறான அவதூறான செய்திகளை பரப்புவோர் மீது அமைதி காக்க முடியாது. இதை உறுதியாகவும், சட்ட ரீதியாகவும் அணுகி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்தான்புல் காங்கிரஸ் மைய கட்டடத்தைக் காட்டி அது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துருக்கி கிளை அலுவலகம் என்று அமித் மாள்வியாவும், அர்னாப் கோஸ்வாமியும் தவறான தகவலைப் பரப்பியதாக காங்கிரஸ் புகார் தெரிவிக்கிறது. 


இந்தியா பாகிஸ்தான் மோதலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி நடந்து கொண்டது. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. துருக்கி சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்த இந்தியர்கள் கூண்டோடு அதை  ரத்து செய்தனர். இதனால் துருக்கி சுற்றுலாத்துறைக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் துருக்கியோடு தொடர்புப்படுத்தி இந்த செய்தி வெளியாகி பரபரப்பைக் கிளப்பி விட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்