கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி

Mar 06, 2026,05:58 PM IST

சென்னை: கடந்த வாரம் வரை திமுக.,விற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவி வரும் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசி உள்ளது காங்கிரசில் இருக்கும் முக்கிய நபர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.


கட்சி முக்கியமா? தனிநபர் விருப்பமா?


கடந்த சில வாரங்களாக, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு (அதிகாரப் பகிர்வு) வேண்டும் என்ற கோரிக்கையை மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட ஒரு சில தலைவர்கள் முன் வைத்து வந்தனர். இது கூட்டணிக்குள் சிறு பிளவை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், கட்சியின் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை குறித்துப் பேசியுள்ள அவர், தனிநபர்களின் விருப்பங்களை விட கட்சியின் வளர்ச்சியே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.


தியாகம் செய்யத் தயார் :




செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "கூட்டணி என்று வரும் போது சில சமரசங்களைச் செய்து கொள்வது இயல்பு. மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறது. தலைமையின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம்," என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.


சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி :


முன்னதாக, தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப் பகிர்வு தொடர்பாக மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்துகளுக்கு திமுக தரப்பில் இருந்து எதிர்வினைகள் வந்தன. குறிப்பாக, கடந்த காலங்களில் திமுக செய்த தவறுகளுக்காக காங்கிரஸ் பழியைச் சுமந்ததாக அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது 'கட்சிதான் பெரியது' என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதன் மூலம், கூட்டணியில் விரிசல் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


தேர்தல் வியூகம் :


தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுகளுக்குத் தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலுவாகவே களம் காணும் என்பது உறுதியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைமைச் செயலகத்தில் புகுந்து போராட முயன்றது ஏன்.. அறிவு விளக்கம்

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்