கபில்தேவ் உலகக் கோப்பை போட்டியைக் காணத்  தகுதி இல்லாதவரா.. ஆச்சரியமா இருக்கே!

Nov 20, 2023,08:11 PM IST

மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எல்லோருடைய கண்களும் இரண்டு பேரைத்தான் அதிகமாக தேடியது. ஒன்று கபில்தேவ்.. இன்னொருவர் எம்.எஸ். தோனி.. ஆனால் இரண்டு பேருமே அங்கு இல்லை.. மாறாக சச்சின் டெண்டுல்கர்தான் பிரதானமாக தெரிந்தார்.. கோவா ஈஷா மையத்தின் ஜக்கி வாசுதேவ் கூட இருந்தார்.. கபில் தேவ், தோனியைத்தான் காணவில்லை.


கிட்டத்தட்ட ஒன்னேகால் லட்சத்தையும் தாண்டி அத்தனை பேர் கூடியிருந்த நிலையில் இந்த ரெண்டு பேரை மட்டும் நாம் ஏன் தேட வேண்டும்... காரணம், அந்த ரெண்டு பேர்தான் நமக்கு இதுவரை உலகக் கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன்கள்.



1983ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. இங்கிலாந்தில் நடந்த 3வது உலகக் கோப்பைப் போட்டித் தொடர் முழுவதும் இந்தியா பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அந்த தொடரில் நாம் கோப்பையை வெல்வோம் என்றெல்லாம் யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஏன், நம்ம இந்திய அணியிலேயே கூட பலருக்கு அந்த நம்பிக்கை இல்லை. ஆனால் கபில்தேவ் நம்பினார்.. தன்னை நம்பினார், தனது அணியின் திறமையை நம்பினார்.. சில வீரர்களை அவர் நம்பவில்லை.. ஆனால் சில வீரர்களின் திறமையை நம்பினார்.


தில்லான தலைவர் கபில் தேவ்




கபில்தேவின் நம்பிக்கையும், வீரர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக தன்னையே அவர் மாற்றிக் கொண்ட விதம், அவர் அணியை வழி நடத்திய அந்த கெத்து.. அத்தனையும் சேர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ஆப்பு வைத்து கப்பை நம் கையில் கொண்டு வந்து போட்டது. அப்படிப்பட்ட பெருமைமிகு சாதனையை முறியடிக்க அவரைப்  போலவே தில்லான ஒருவர் வர வேண்டியிருந்தது.


அப்படி வந்து சேர்ந்தவர்தான் மகேந்திர சிங் தோனி. கபில்தேவைப் போலவே சிறந்த மோட்டிவேஷனல் லீடராக திகழ்ந்தவர் . கபில் தேவைப் போலவே தானே முன்னின்று அணியை வழி நடத்தினார். கபில் தேவ் போலவே தன்னையே ரோல் மாடல் ஆக்கியவர் தோனி. அணியை ஒருங்கிணைத்தது, திறமைகளை சரியாக பயன்படுத்தியது, பிரஷர்களுக்கு இடம் கொடுக்காமல் சூழல்களைப்புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக செயல்பட்டு காரியத்தை சாதித்தார் தோனி.


கச்சிதமாக சாதித்த தோனி




1983ம் ஆண்டு நம்மிடம் வந்து விட்டு பிறகு தொடர்ந்து டபாய்த்துக் கொண்டிருந்த கோப்பையை, கப்பென பிடித்து 2011ல் மொத்த இந்தியர்களையும் குஷியாக்கியவர் தோனி. கபில் தேவ் போலவே அவரும் கூட அணியில் சில பல பாலிட்டிக்ஸ்களை எதிர்கொண்டவர்தான். கபில்தேவ் எப்படி தான் சந்தித்த முட்டுக்கட்டைகளை முறித்துப் போட்டு கப் அடித்தாரோ, அதேபோலவே தோனியும் தனது துணிச்சலான நடவடிக்கைகளால் அணியை அழகாக பயன்படுத்தி கோப்பையை வென்று சாதித்தார்.


கபில்தேவ் ஒரு உலகக் கோப்பையைத்தான் வென்றார். ஆனால் தோனி, டி20 உலகக் கோப்பையையும் சேர்த்து வென்று டபுள் தமாக்காவாக நமது சந்தோஷத்தை மாற்றிக் கொடுத்து மகிழ்வித்தார். 


கபில்தேவ், தோனி வந்திருக்க வேண்டும்


இந்த இருவரும் இல்லாமல் இந்தியாவில் ஒரு உலகக் கோப்பைப் போட்டி என்றால் அதை ஜீரணிப்பது சிரமமாக இருக்கிறது. கண்டிப்பாக இவர்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் வரிசையில் அமர வைத்து அழகு பார்த்திருக்க வேண்டும்.. அந்த இரண்டு ஜாம்பவான்களும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாலே, மொத்த வீரர்களுக்கும் பூஸ்ட் அப் ஆகியிருக்குமே.. அவர்களைப் பார்த்துப் பார்த்தே தங்களுக்கு எனர்ஜி ஏற்றியிருப்பார்கள்.. அதுவும் தோனி வந்திருந்தால்.. டீம் சும்மாவா இருந்திருக்கும்.. பட்டையைக் கிளப்பியிருக்காது.. இன்னும் கூடுதல் உத்வேகம் கிடைத்திருக்குமே.. தவறி விட்டார்கள் அதைச் செய்ய.




கபில் தேவ் அழைக்கப்படாதது தவறுதான்.. தோனியையும் கண்டிப்பாக அழைத்திருக்க வேண்டும். அவர்கள் மீது யாருக்கு என்ன கோபம் என்பது இப்போது முக்கியமில்லை.. இந்தியாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய கோல்டன் சான்ஸ் நேற்று நடந்த இறுதிப் போட்டி.. அதை நாம் தவற விட்டு விட்டோம்.


நாம் "தங்கங்களை"த் தவற விடுவது இது முதல் முறையல்ல என்ற வேதனையான உண்மையும் மனதில் வந்து போகிறது!

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்