- ஸ்வர்ணலட்சுமி
ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு சுவையான உணவு வகை இருக்கும். தமிழ்நாட்டின் சிறப்புகளில் அதுதாங்க முக்கியமானது. அந்த வகையில் இந்த கொங்கு நாட்டு ஸ்பெஷல் நெல்லிக்காய் தொக்கு சூப்பரா இருக்குங்க.. செஞ்சு பாருங்க.. டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க.. அப்புறம் விடவே மாட்டீங்க.
தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 4
வர மிளகாய் - 5 (தேவைக்கு ஏற்ப)
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தக்காளி - 3
புளி - சிறிதளவு (எலுமிச்சை அளவு)
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
செய்முறை :
வெந்தயம் 1/4 ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். நெல்லிக்காய் கழுவி ஆறிய பின் நறுக்கி (சிறிய துண்டுகளாக) மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் வர மிளகாய், சீரகம், மஞ்சள் தூறா், புளி, பருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் இந்த கலவையை அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் வெந்தயத்தை போட்டு பொனக்னிறமாக வந்ததும் மிக்ஸியில் அரைத்த கலவையை ஊற்றி, தேவைக்கு ஏற்ப உற்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். வெந்தயம், சீரகம் சேர்த்து வறுத்த பொடித்த பொடியை கடைசியாக தூவி இறக்கினால் சுவையான, நாக்கு ஊர வைக்கும் நெல்லிக்காய் தொக்கு ரெடி. இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றிற்கு சரியான சைடு டிஷ் இது. அதிலும் பேச்சுலர்சிற்கு மிகவும் பயன்படும் ஒரு ரெசிபியும் கூட.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}