சரக்கு பட விழாவில்.. பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்!

Sep 20, 2023,04:29 PM IST

சென்னை: சரக்கு திரைப்பட இசைவெளியீட்டு விழாவின் போது விழாவைத் தொகுத்து வழங்கிய பெண்ணுக்கு கழுத்தில் மாலை போட்டு அநாகரீகமாக நடந்து கொண்டார் கமெடி நடிகர் கூல் சுரேஷ். இதற்கு கடும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் கூல் சுரேஷ்.


மன்சூர் அலிகான் தயாரித்து நடித்துள்ள படம்தான் சரக்கு. சரக்கு திரைபடத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த படத்தில் மன்சூர் அலிகான் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். ஜெயக்குமார் ஜே என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். 


விழாவில் சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போது ஏடாகூடமான காமெடி நடிகர்  கூல் சுரேஷும் கலந்து கொண்டார். வழக்கம் போல பஞ்சாயத்தைக் கூட்டி விட்டார். தனது கழுத்தில் பெரிய ரோஜா மாலையைப் போட்டுக் கொண்டும், கையில் ஒரு மாலையைப் பிடித்தபடியும் வந்த கூல் சுரேஷ், எல்லோருக்கும் மாலை போடுகிறோமே இவருக்கு மாலையே போடலையே என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு திடீரென்று மாலையை போட்டுவிட்டார்.


எதிர்பாராத விதமாக நடந்த இச்சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.  அந்தப் பெண் கடுப்பாகி மாலையைத் தூக்கி கீழே எறிந்தார். அந்த இடமே பரபரப்பானது. ஆனால் கொஞ்சம் கூட வெட்கமோ, இங்கிதமோ, உறுத்தலோ இல்லாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் கூல் சுரேஷ். அந்தப் பெண்ணைப் பார்த்து கோபமா என்று வேறு கேட்டார். அந்தப் பெண்ணோ கூல் சுரேஷைக் கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை. 




ஆனால் இந்த சம்பவத்தை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பிரச்சினையாக எழுப்பினர். பொது இடத்தில் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷை எதற்காக இங்கெல்லாம் அழைக்கிறீர்கள்.. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கூல் சுரேஷை மன்னிப்பு கேட்குமாறு மன்சூர் அலிகான் உத்தரவிட அவரும் பூசி மெழுகி மன்னிப்பு கேட்டார்.  மன்சூர் அலிகானும் மன்னிப்பு கேட்டார்.


யார் இந்த கூல்


சாக்லெட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாவர் கூல் சுரேஷ்.  காக்க காக்க, தேவதையைக் காண்டேன் ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் சிங்கம் புலி மற்றும் சந்தானம் ஆகியோருடன் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார்.  படித்தவுடன் கிழித்து விடவும் திரைப்படத்தில் கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதுவே சுரேஷ் நாயகனாக நடித்த முதல் திரைப்படம் ஆகும்.




வெந்து தணிந்தது காடு படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய துவங்கிய நடிகர் கூல் சுரேஷ் பல படங்களுக்கு  தியேட்டர் வாசலிலேயே நூதன முறையில் விமர்சனங்களை கொடுத்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், புதிய படங்களின் பார்க்க வரும் போது பல கெட்டப்புகளில் வந்து சர்ச்சையை எற்படுத்துவதும். பார்ப்பவர்கள் முகம் சுழிக்கு அளவுக்கு ஏடாகூடமாக ஏதையாவது செய்வதும் இவருடைய வழக்கம். இவர் குறித்த செய்திகள் மற்றும் செயல்கள்  சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன. கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

உழைப்பின் உயர்வு (கவிதை)

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

அதிகம் பார்க்கும் செய்திகள்