சென்னை: கூலி படத்தின் டிரெய்ரல் ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதேபோல கைதி 2 படம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இது 2025 ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் டிரெய்லர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும். அடுத்து ஆமிர் கானுடன் இணைந்து ஒரு படம் செய்யவுள்ளேன். அது ஒரு பெரிய அதிரடி திரைப்படமாக இருக்கும்.
தளபதி விஜய் விருப்பப்பட்டால் லியோ 2 மற்றும் மாஸ்டர் 2 படங்களை இயக்கவும் நான் தயாராக இருக்கிறேன். கூலி திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் அனிருத்தின் தேர்வு தான். அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் இருவரும் மோனிகா பெல்லுச்சியின் பெரிய ரசிகர்கள். முதலில், மோனிகா பெல்லுச்சியைப் பற்றி ஒரு பாடல் உருவாக்க முடிவு செய்தோம். பின்னர், பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரத்திற்கு மோனிகா என்று பெயரிட்டோம்" என்றார். மோனிகா பெல்லுச்சி மீதுள்ள அபிமானத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கைதி 2 படத்திற்கு பிறகு, நான் ஆமிர் சாருடன் ஒரு படம் பண்ணுகிறேன். அது ஒரு ஹிந்தி படம். ஆனால், இந்தியர்களுக்காக மட்டுமல்ல, உலக சினிமாவுக்காகவும் இருக்கும். அவர் கமல்ஹாசன் சார் போலவே இருக்கிறார். இது சூப்பர் ஹீரோ படமா என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால், இது மிகப்பெரிய அதிரடி திரைப்படமாக இருக்கும் என்றார் அவர்.
கூலி திரைப்படத்தில் இடம்பெறும் "மோனிகா" பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு ஒரு tribute ஆக அமைந்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த பாடல், ஜூலை 11 அன்று வெளியானது. பூஜா ஹெக்டேவின் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. "ஜவான்" படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
{{comments.comment}}