ஒரே ஆபீஸ்.. அரும்பிய காதல்.. அலுவலகத்திலேயே முத்தம். வேலை போச்சு.. அச்சச்சோ!

Sep 13, 2024,10:24 AM IST

பெய்ஜிங்: சீனாவில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஒரு ஜோடி, அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொண்டதால் தங்களது வேலையை இழந்துள்ளனர்.


காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மெளனமொழியே முத்தம். காதலர் தினத்தின் ஒரு முன்னோட்டமாக, பிப்ரவரி 13ம் தேதி முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இப்படி முத்தம் கொடுப்பதற்கு என்று ஒரு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படி அலுவலகத்தில் முத்தம் கொடுத்து அதற்காக வேலையை இழந்த ஜோடிகளும் உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்.




சீனாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் லியூ மற்றும் சென் என்பவர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இதில் லியூ என்பவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. லியூவும் சென்னும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததால் நட்பு உருவாகியுள்ளது. இவர்களின் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில், இருவரும் பணிபுரியும் இடத்திலேயே முத்தமிட்டு கொண்டு இருந்துள்ளனர். இது லியூவின் மனைவிக்கு தெரியவர. லியூவின் மனைவி முத்த ஆதாரங்களை மொத்தமாக சேகரித்து கணவரின் அலுவலக மேலதிகாரிகளுக்கு அனுப்பி விட்டார்.


இதனை அறிந்த அந்நிறுவனம், நிறுவனத்தின் விதிகளை மீறியதாக கூறி லியூ மற்றும் சென் இருவரையும் பணிநீக்கம் செய்தது. தங்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர் லியூவும், சென்னும். தனித்தனியாக சுமார் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, அலுவலகத்தில் முத்தமிட்டது விதிமுறைகளுக்குப் புறம்பானது, எனவே டிஸ்மிஸ் நடவடிக்கை சரியே என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டது.


முத்தம் கொடுக்கப் போய் இப்போது மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது இந்த ஜோடி!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்