கோர்ட் உத்தரவு... ஜெயிலர் படத்தில் முக்கிய காட்சிகள் நீக்கம்

Aug 29, 2023,09:48 AM IST
டெல்லி : டெல்லி ஐகோர்ட் உத்தரவின் பேரில் ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான ஜெயிலர் படத்தில் இருந்து முக்கியமான சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசானது. கடந்த இரண்டு வாரங்களாக உலகம் முழுவதும் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத புதிய வசூல் சாதனையாக ஜெயிலர் படம் ரிலீசான 2 வாரங்களிலேயே ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சுனில், மிர்னா, யோகி பாபு, ஷிவ் ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷரோஃப், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். காமெடி, ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த ஜெயிலர் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 

ஜெயிலர் படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகர் ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட்டின் ராயர் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டி ஷர்ட்டை அணிந்திருப்பார். அதில் பெண்களுக்கு எதிரான வாசகங்களும் இடம்பெற்றிருக்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மிகவும் புகழ்பெற்ற அணியின் பெயருக்கும், புகழுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி பிரதீபா எம். சிங், பெங்களுரு அணியின் டிஷர்ட் அணிந்திருப்பது போல் வரும் அந்த குறிப்பிட்ட காட்சியை செப்டம்பர் 01 ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். டிவியில் ஒளிபரப்பும் போதும், ஓடிடி தளத்தில் படம் ரிலீசாகும் போகும் அந்த காட்சிகள் இடம்பெறக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்