டெல்லி : நாடு முழுவதும் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 841 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளதால் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் இதுவரை 4309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 312 பேர் குணமடைந்ததால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3997 ஆக குறைந்துள்ளது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அதிகமானவர்கள் ஒன்றாக கூடும் போது கொரோனா பாதிப்பு 5 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவிற்கு கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், பீகார், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
டிசம்பர் 30 ம் தேதி கணக்கின் படி இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரசான ஜேஎன் 1 வைரசால் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 41 பேர் இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 36 பேரும், கர்நாடகாவில் 34 பேரும், கர்நாடகாவில் 9 பேரும், தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் ஒருவரும், தெலுங்கானாவில் 2 பேரும் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}