மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடு உயர்வு.. 24 மணி நேரத்தில் 4 பேர் மரணம்

Apr 05, 2023,12:07 PM IST
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலனையில் இறங்கியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. இது சற்று வேகமாக உள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது, மக்கள் பீதி அடைய வேண்டும் என்று அரசுகள் கூறினாலும் கூட, நிலைமையைப் பார்த்தால் சற்று அச்சமாகத்தான் உள்ளது. காரணம், தற்போது மரணங்கள் குறித்த தகவல்கள் அதிகரித்து வருகின்றன.



தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்தடுத்து மரணச் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் மட்டும் 218 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 248 பேருக்குத்தான் கொரோனா கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 3792 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் மாக் டிரில் நடத்தப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் தானாஜி சவந்த் கூறியுள்ளார்.  மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சோலாப்பூர், சாங்கிலி, கோலாப்பூர், சிந்துதுர்க், புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில்தான் அதிக அளவிலான கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்