டெல்லி: ஜகதீப் தன்கர் என்ற பெரும் புயல் ஓய்ந்து விட்ட நிலையில் அந்த இடத்தை நிரப்ப தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக துணை குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய ஜகதீப் தன்கர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதற்கு முன்பு மேற்கு வங்க ஆளுநராக அவர் செயல்பட்டார். அப்போது ஏற்பட்ட சர்ச்சைகளால் நாடு முழுவதும் பிரபலமானார். அதன் எதிரொலியாகவே அவரை குடியரசுத் துணைத் தலைவராக்கியது பாஜக. ஆனால் ராஜ்யசபாவிலும் அவரது செயல்பாடுகள் சலலசப்பை ஏற்படுத்தின. பதவியின் நடுநிலையைச் சிதைத்தவர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜகதீப் தன்கர். 2022ல் ஜாட் சமூகத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் துணைக் குடியரசுத் தலைவரானதால் அந்த சமூகத்தினர் சற்று அமைதியடைந்தனர். இருப்பினும் குடியரசுத் துணைத் தலைவராக அவரத் வேகமான செயல்பாடுகள், பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் அவர் தெரிவித்த கருத்துக்கள் பாஜகவுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. உச்சகட்டமாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கும் தீர்மான விவகாரத்தில் அவருக்கும், பாஜக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தனது பதவியை தன்கர் ராஜினாமா செய்ய நேரிட்டது.
இந்த நிலையில் தற்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், அப்படியே தன்கருக்கு நேர் எதிரானவர். மிகவும் நிதானமானவர், அமைதியானவர், யோசித்து பேசக் கூடியவர். அடுத்தவர்களை புண்படுத்தும் வகையில் பேச மாட்டார். ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர்தான் சி.பி.ராதாகிருஷ்ணன். கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கக் கூடியவர். எல்லாவற்றிலும் முக்கியமாக தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் இயல்பாகவே பக்குவம் நிறைந்தவராகவும் இருப்பவர்.
பாஜகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அவர்களால் காலூன்ற முடியவில்லை. கர்நாடகத்தில் கூட வந்து விட்டார்கள். ஆந்திரா, தெலுங்கானாவிலும் அழுத்தமாக வளர்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடும், கேரளாவும் இன்னும் பாஜகவை ஏற்க தயாராக இல்லை. இந்த நிலையை மாற்றும் முகமாகவே தென்னிந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ஆரை குடியரசுத் துணைத் தலைவராக்க பாஜக முடிவு செய்துள்ளது.
அடிப்படையில் தென்னிந்தியத் தலைவர்கள் எல்லோருடனும் அனுசரித்துப் போவார்கள். அது சிபிஆர் சிறப்பாக செயல்பட கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம், கண்டிப்பு காட்டுவதிலும் சிபிஆர் பெயர் போனவர். எனவே அவரது செயல்பாடுகள் எந்த வகையில் இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோருக்குப் பிறகு துணைக் குடியரசுத் தலைவராகும் 3 தமிழ்நாட்டுக்காரர் சி.பி.ராதாகிருஷ்ணன். தென்னிந்தியர் என்று பார்த்தால், 6வது தென்னிந்தியத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு செக் வைக்க.. இன்னொரு தமிழ்நாட்டுக்காரரை வேட்பாளராக்குமா இந்தியா கூட்டணி?
ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமில்லை... இதோ இன்றைய தங்கம் விலை நிலவரம்!
7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் ..இல்லாவிட்டால் புகார் வாபஸ்..ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன்கெடு
துணைக் குடியரசுத் தலைவர்.. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்?.. இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை!
Motivational Monday: 1000 புள்ளிகள் அதிரடி உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்!
ஜகதீப் தன்கர் டூ சி.பி. ராதாகிருஷ்ணன்.. ஒருவர் அரசியல் புயல்.. சிபி ராதாகிருஷ்ணன் எப்படி இருப்பார்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18, 2025... இன்றைய நாள் எப்படி இருக்கு?
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
{{comments.comment}}