டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 12ம் தேதி பதவியேற்கிறார்.
நாட்டின் துணை குடியரசு தலைவராக இருந்து ஜெகதீப் தன்கர் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் (68), இந்தியா கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் (79) வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் electoral college-ல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றனர். மேலும் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்களும் electoral college-ல் இடம் பெற தகுதியுடையவர்கள். எனவே, அவர்களும் தேர்தலில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் காலை தொடங்கி நடைபெற்ற வாக்குப் பதிவு மாலையில் முடிவடைந்தது. இதையடுத்து 15வது துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலின் முடிவுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மொத்தம் 452 ஓட்டுக்கள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளரான பி.சுதர்சன ரெட்டி 300 ஓட்டுக்கள் பெற்று தோல்வியைச் சந்தித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பாஜக தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைக்கிறார். தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதிவியை அவர் ராஜினாமா செய்ய பின்னர், துணை ஜனாதிபதியாக பெறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}