மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

Sep 12, 2024,06:20 PM IST

டில்லி : டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.


1952 ம் ஆண்டு சென்னையில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சீதாராம் யெச்சூரி, வளர்ந்தது, படித்து எல்லாமே ஹைதராபாத்தில் தான். 1969ம் ஆண்டு டில்லி சென்று பள்ளி படிப்பை தொடர்ந்த அவர், படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக திகழ்ந்தவர். இவர் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் முடித்தவர். 




1974ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூட்ஸ்ட் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை துவக்கினார். 1975ம் ஆண்டு அவசர கால நிலையின் போது கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். இவர் பல புத்தகங்களையும் எழுதி உள்ளார்.


ராஜ்யசபா எம்.பி., யாகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்ட கால பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தவர். 2015ம் ஆண்டு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தவர் இவர். பார்லிமென்னட்டில் பாஜக.,வின் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்த்து அதிகம் குரல் கொடுத்தவர். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது மகன் 2021ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வயது முதிர்வின் காரணமாக, 72 வயதான சீதாராம் யெச்சூரி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.


இரண்டு நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பகல் 03.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.


தலைவர்கள் அஞ்சலி


சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்