சென்னை: காலில் எற்பட்ட காயத்தில் இருந்து கேப்டன் எம்எஸ் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்றவர் தோனி. 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடித்து வருகிறார். ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக, அது உருவாக்கப்பட்டது முதல் நீடித்து வரும் ஒரே கேப்டன் தோனி மட்டுமே.
முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தோனியை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், தோனி முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று சீசன்களை அவர் விளையாடலாம் என்றும் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார் தோனி. ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்வார். அவர் இல்லாமல் சென்னை அணிக்காக விளையாடுவது மிகவும் கடினம். அனைவரும் தோனி இருக்கும் சிஎஸ்கே அணியை தான் பார்த்திருக்கிறார்கள். தோனியுடன் நெருங்கி பழக ரெண்டு மூன்று ஆண்டுகள் ஆனது. எளிமையான பழக்கவழக்கமுடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக் கூடியவர்.
அதே சமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதலுடன் இருப்பவர். அவருடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுவது, கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு உண்டு. அவரை எனது அண்ணன் போலத்தான் நான் பார்க்கிறேன். அவருக்கும் நான் ஒரு தம்பி போலத்தான் என்று பாசத்துடன் கூறியுள்ளார் சஹார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}