12,000 பேர் டிஸ்மிஸ் சரிதான்.. ஆனால்.. சுந்தர் பிச்சையை எச்சரிக்கை செய்த  முதலீட்டாளர்

Jan 24, 2023,12:25 PM IST
லிபோர்னியா: கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 12,000 பேரை டிஸ்மிஸ் செய்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் இது போதாது. இன்னும் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று கூகுள் முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.  கூகுள் நிறுவனம் ஜனவரி 21ம் தேதி 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது ஐடி உலகை அதிர வைத்துள்ள நிலையில் இது போதாது என்று கூகுள் நிறுவனத்தில் 6 பில்லியன் டாலர் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஹான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

6 சதவீத ஊழியர்களை கூகுள் வேலைநீக்கம் செய்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை.  ஆனால் இது வளர்ச்சிக்கு உதவாது. இன்னும் பல ஆயிரம்  பேரை நீக்கியாக வேண்டும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆல்பாபெட் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்து விட்டது.  இதை 1.5 லட்சமாக குறைக்க வேண்டும். இன்னும் 20 சதவீத ஊழியர்களை குறைத்தால்தான் நல்லது. 
இதுதொடர்பாக விரைவில் உங்களுடன் பேச வேண்டும் என்று ஹான் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆல்பாபெட் நிறுவனம் கூகுள், யூடியூப் மற்றும் தனது பிற தயாரிப்புகளை மேம்படுத்த பல்வேறு திறமையாளர்களை நிறுவனத்தில் இணைத்துக் கொண்டே வந்தது. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்