- சுமதி சிவக்குமார்
சென்ற ஆண்டு 2024 ல் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட துயரம் உங்களுடன் பகிர்கிறேன்.
நான் பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மூங்கில்துறைப்பட்டு கிராமம். 1972ல் கட்டப்பட்டு 1977ல் முதல் கரும்பு அரவை செய்யப்பட்டது தான் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை.
1972ல் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரம் இருந்த இந்த ஊரில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து பாலத்தின் நான்கு புறங்களிலும் தூண்கள் எழுப்பி அதன் முனையில் நமது அசோக சக்கரமும் அதன் மேல் நான்கு முக சிங்கமும் பொறிக்கப்பட்டது.
1972 இல் வந்த வெள்ளத்தில் அந்த சிங்க முகம் தலை மட்டும் வெளியில் தெரிந்ததாக என் முன்னோர் கூறினார்கள். அந்தளவுக்கு வெள்ளம் வந்ததாம்.

அதன் பிறகு அந்த ஆற்றில் பாலத்துக்கு கீழே தான் தண்ணீர் போனது நானும் பலமுறை பார்த்திருக்கிறேன்.ஆனால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பாலத்தை ஒட்டி சென்ற தண்ணீர் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்திலும் திருவண்ணாமலை சாத்தனூர் டேம் சுமார் 13,000 அடி நீர் திறந்து விட்டதால் ஏற்பட்ட வெள்ளத்திலும் எனது ஊரில் கரையோரத்தில் வசித்த மக்களின் வீடுகள், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.
உபயோகப் பொருட்கள் துணிமணிகள் சிலிண்டர் தட்டுமுட்டு சாமான்கள் நாற்காலிகள் என அத்தனையும் அடித்து செல்லப்பட்டன. பல முக்கிய பத்திரங்கள் கூட நனைந்து விட்டன.
பாதிக்கப்பட்ட அனைவரும் சர்க்கரை ஆலை சமுதாய கூடத்திலும் திருமண மண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையானவற்றை அனைத்து வணிகர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், சங்கம் அரிமா, இளைஞர் சங்கம் சார்பில் உணவுகள் துணிமணிகள் போர்வை, பாய், தலையணை என கொடுத்து மூன்று நாட்கள் பாதுகாத்தனர்.
டிசம்பர் 12 அன்று, என்னுடன்படித்த நண்பர் திலீப்குமார் அவர்கள் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார். அவரும் அவருடன் இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஆற்றங்கரையோரம் இருந்த மின்மோட்டாரை பழுது பார்க்க மின்கம்பிகளை எடுத்து செல்லும் போது சேறும் சகதியமாக இருந்த இடத்தில் கால் வைத்தால் தவறி ஆற்றின் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்கள். இரு நண்பர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் திலீப்குமாரின் கதி என்னவென்று தெரியாத நிலையில் நாங்கள்.
என் நண்பரை கண்டுபிடிக்க பட்டபாடு மற்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று அவரது குடும்பமும் அந்த ஊரும் அடைந்த சோகம் சொல்லி மாளாது. அவர் உயிருடன் வர வேண்டி இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அவரவர் தெய்வங்களை வேண்டி அவரவர் வழிபாடு நடத்தினர்.
இதை கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. எனது ஊரிலிருந்து திருமணமாகி மற்றும் பிழைப்புக்காக வெளியூர் வெளிநாடு வந்தவர்கள் என்று எல்லோரும் கடவுளிடம் வேண்டினோம்.
ஆனால் மூன்று நாட்கள் கழித்து திருக்கோவிலூர் அருகே ஆற்றின் கரையோரம் அவரது உடல் ஒதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து ஊரே கதறி அழுதது என்னால் இன்றும் மறக்க இயலவில்லை.
இம்மாதிரியான நிகழ்வு இனியும் எங்கும் வேண்டாம் என மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
{{comments.comment}}