ஸ்தம்பித்துப் போன புதுச்சேரி.. வெள்ளத்தில் மிதக்கிறது.. அதகளப்படுத்தி விட்டு கரையைக் கடந்த ஃபெஞ்சல்

Dec 01, 2024,08:17 AM IST

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டை அச்சுறுத்தி விட்டு கடைசியில் புதுச்சேரியை பதம் பார்த்து விட்டது. புதுச்சேரியில் புயல் காரணமாக மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. புயல் கரையைக் கடந்தும் கூட அங்கு இன்னும் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக எல்லோரையும் படபடக்க வைத்து விட்டது. முதலில் வேகமாக கிளம்பி வந்த இந்தப் புயலானது பின்னர் மெதுவாக நகர்ந்தது. இடையில் புயலாக மாறாது என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் வலுவடைந்த புயலாக மாறி போக்குக் காட்டிக் கொண்டே வந்தது. நேற்று மாலைக்கு மேல் அது புதுச்சேரிக்கு வெகு அருகே கரையைக் கடந்தது.




புயல் தமிழ்நாட்டுக் கரைப் பகுதியில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  புதுச்சேரியை மையமாக வைத்து அது கடந்ததால் புதுச்சேரிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. புதுச்சேரியில் மிக அதிக கன மழைக் கொட்டித் தீர்த்தது. சூறைக்காற்றும் சேர்ந்து கொண்டதால் ஊரே ஸ்தம்பித்துப் போனது. மின்சாரம் பாதிக்கப்பட்டு, ஊரே வெள்ளக்காடாகி விட்டது. நேற்று மாலை முதல்  அதீதமாக கொட்டித் தீர்த்த மழை புயல் கரையைக் கடந்த சமயத்தில் மேலும் அதிகரித்தது. கடுமையான சூறாவளிக் காற்றும் சேர்ந்து கொண்டதால் புதுச்சேரி ஸ்தம்பித்தது.


புயல் நள்ளிரவு போலத்தான் முழுமையாக கடந்து சென்றது. அதன் பிறகும் மழை விடவில்லை. காலையிலும் மழை தொடர்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.


கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கிட்டத்தட்ட 470 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  அதேசமயம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 498 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்திலும் அதீத கன மழை பெய்துள்ளது. 


புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் எல்லாம் வெள்ளம் போல மழை நீர் ஓடிக் கொண்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்துள்ளது. சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மழை நீர் வழிந்தோட முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் மீட்புப் பணிகளில் ராணுவத்தை ஈடுபடுத்த புதுச்சேரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விரைவில் மீட்புப் படையினர் விரைந்து வரவுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்