- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் டிசம்பர் நான்காம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை புயலாக உருவாகும். இந்த புயலுக்கு மிச்சாங் என பெயர் சூட்டப்படும்.
தற்போது புயல் சின்னமானது 18 கி மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்கிறது. இது சென்னையிலிருந்து 510 கிமீ கிழக்கு தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. பின்னர் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி முற்பகல் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டனத்துக்கும் இடையே, புயல் கரையைக் கடக்கும் .அப்போது மணிக்கு 80 முதல் 90 கிமீ இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும்.
புயல் சின்னம் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,
உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 3ஆம் தேதி வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர், சென்னை ,வேலூர் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ,கடலூர், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை:
டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை ,வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ,போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம்.
டிசம்பர் 4ஆம் தேதி உருவாகும் மிச்சாங் புயலால் திருவள்ளூரில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}