- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 2 ,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது . தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் தென்மேற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இந்த புயலுக்கு மிச்சாங் என பெயரிடப்படும். இந்த புயல் சின்னம் தற்போது சென்னையிலிருந்து 800 கிமீ தொலைவிலும் , கிழக்கே புதுச்சேரியில் இருந்து 790 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை சென்னைக்கு வடக்கே ஆந்திராவின் மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.
இன்று மழை நிலவரம்:
சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,நாகை ,ராமநாதபுரம், திருவள்ளூர், ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழையையும், அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையையும் பெய்யக்கூடும். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழையையும் எதிர்பார்க்கலாம்.
இலங்கை கடல் பகுதியில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சியை தொடர்ந்து நிலவி வருவதால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடல் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் அளவு:
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 19 செமீ மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 5.5 செமீ மழையும், தலைஞாயிறில் 5.4 செமீ மழையும், திருக்குவளையில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}