சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது புயலாக அது மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 12 மணி நேரத்தில் புயலாக இது மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நான்கு மாவட்டங்களுக்கு நாளை விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அதை ஆரஞ்சு அலர்ட்டாக வானிலை மையம் மாற்றியுள்ளது. புயல் சின்னமானது மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் மிக மிக மெதுவாக தற்போது நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக வலுப்பெற்ற பிறகு 30ம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புயல் சின்னமானது சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
முன்னதாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு இலங்கை பகுதியை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற கூடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் எனவும் பெயர் சூட்டப்படவுள்ளது.

இன்று காலை நிலவரப்படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாற ஆரம்பித்துள்ளது. புயல் சின்னத்தின் வேகம் அடியோடு குறைந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இன்று காலைதான் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாறியுள்ளது. புயல் சின்னம் காரணமாக விழுப்புரம், கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}