சென்னை: பத்து கட்சி பண்ருட்டி என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்குப் பெயர் சூட்டி அவரை விமர்சித்துள்ளார் மூத்த அதிமுக தலைவர் டி. ஜெயக்குமார்.
அதிமுக - பாஜக கூட்டணி டமால் ஆவதற்கான திரியை முதலில் பற்ற வைத்தவர் ஜெயக்குமார்தான். இவர்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை இல்லை என்று அதிரடியாக முதன் முதலில் கூறியவர். அப்போது கூட பலர் இதை லேசாத்தான் எடுத்துக் கொண்டனர். பின்னர் நிஜமாகவே கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வருவதாக அறிவித்தபோது டக்கென ஹீரோவாக உயர்ந்து விட்டார் ஜெயக்குமார்.
பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர், பாஜக-அதிமுக இடையே மோதல் வலுப்பெற்றது. குறிப்பாக அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்தது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டதாக அறிவித்தது.
ஆனால் அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்த பாஜக தலைமை முயன்று வருவதாக ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று ஓபிஎஸ் தலைமையில் ஒரு திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குற்றச்சாட்டு அல்ல. it is a fact. அதேசமயம், அண்ணா குறித்து அண்ணாமலை கூறியது தவறானது. இருப்பினும் உள்நோக்கத்துடன் அவர் பேசியதாக நாங்கள் கருதவில்லை என்றார்.
இதற்குத்தான் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில்,
பத்துக்கட்சி பண்ருட்டி அம்மா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை 'It is a fact' என சொல்கிறார்.
அடுத்தவர் பேச அமைதி காத்தார். அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் இந்த நடிப்பின் நாயகன்.
தாயை பழிப்பதை மகிழ்வோடு தாலாட்டு கேட்பதை போல கேட்கும் சுயநலவாதி பன்னீர்செல்வம் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
ஜெயக்குமார், பத்துக்கட்சி பண்ருட்டி என்று கூறியதை மட்டும் அதிமுகவினர் எடுத்துக் கொண்டு இப்போது கலகலக்க வைத்து வருகின்றனர் டிவிட்டரை. பண்ருட்டி ராமச்சந்திரன் இதுவரை பாமக, அதிமுக, தேமுதிக, அதிமுக, பின்னர் ஓபிஎஸ் என பல்வேறு கட்சிகள், அணிகளில் இடம் பெற்றவர் என்பதால்தான் அவரை பத்து கட்சி பண்ருட்டி என்று "அன்போடு" அழைத்துள்ளார் ஜெயக்குமார் என்று தெரிகிறது.!
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}