பரீதாபாத்: ஹரியானா மாநிலம் பரீதாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் பார்த்து வந்த வங்கி வேலையை விட்டு விட்டு வீடு வீடாக போய் பால் ஊற்றும் வேலையைச் செய்து வருகிறார். இதில் விசேஷம் என்னவென்றால் அவர் பால் சப்ளைக்கு ஆடி காரில்தான் போய் வருகிறாராம்.
ஆனி போய் ஆடி வந்தா டாப்புல போய்ருவ என்று சினிமா வசனம் கேட்டிருப்போம்.. ஹரியானாவில் ஒருவர் ஆடி காரில் போய் டாப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அமித் பதானா என்ற இளைஞர் ஆரம்பத்தில் வங்கியில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு, இப்போது ஆடம்பர காரில் பால் வியாபாரம் செய்கிறார். தனது ஆர்வத்தை தொழிலாக மாற்றியதால் அவர் ஊரெங்கும் பேசப்படுகிறார். சம்பளம் வாங்கி வேலை பார்த்தவர் இன்று முதலாளியாக மாறி அசத்துகிறார்.
மொஹப்பதாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் பதானா. அவருக்கு பைக் மற்றும் கார்கள் மீது தீராத காதல். ஆனால், வங்கியில் வேலை செய்ததால், தனது ஆர்வத்தை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்று வருத்தப்பட்டார். ஏற்கனவே பால் வியாபாரம் செய்து வந்த குடும்பத்தில் இருந்து வந்ததால், தனது ஆர்வத்தையும் குடும்பத் தொழிலையும் இணைக்க முடிவு செய்தார். அதாவது பால் வியாபாரம் செய்வது என்பது அவரது முடிவு.. அதை வித்தியாசமாக செய்ய தீர்மானித்தார். அங்குதான் தனது ஆர்வத்தையும் இணைத்தார். அதுதான் ஆடி காரில் போய் பால் வியாபாரம் செய்வத என்பது.
எனது ஆர்வத்தை தொழிலாக மாற்றி, குடும்பத் தொழிலையும் பார்க்க முடிவு செய்தேன் என்று கூறும் அவர் முதலில் வங்கி வேலையை விட்டு விலகினார். பின்னர் பைக்கில் பால வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். அதுவும் சாதாரண பைக் கிடையாது.. மாறாக Harley-Davidson பைக் வாங்கினார். இதன் மூலம் தனது ஆசையை நிறைவேற்றியதுடன், பால் வியாபாரத்தையும் தொடர்ந்து செய்தார்.
பால் வியாபாரம் வேகமாக வளர்ந்தது. டெலிவரி அதிகமாக அதிகமாக, தனது வாகனத்தையும் மாற்றினார். இன்று, அமித் பதானா சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள Audi காரில் வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் செய்கிறார். அவரது இந்த வித்தியாசமான கதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Harley பைக் வைத்திருக்கும் பால் வியாபாரி என்று அழைக்கப்படும் அமித் பதானா, தனது பைக்கில் பால் டெலிவரி செய்யும் வீடியோவை வெளியிட்டார். அது வைரலாகியது.
இதுவும் நல்ல தொழில்தான். பால் வியாபாரம் செய்வதில் தனக்கு எந்த அவமானமும் இல்லை. கார் ஓட்டுவது எனக்குப் பிடிக்கும். அந்த ஆசையை என்னால் விட முடியாது. இப்போது எனது ஆர்வத்தை குடும்பத் தொழிலுடன் இணைத்துவிட்டேன். இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. எனது ஆசையும் நிறைவேறுகிறது என்று கூறியுள்ளார் பதானா.
தனது தொழிலால், தனது குடும்பத்தினர் பெருமைப்படுவதாகவும், அவர்கள் அளித்த ஆதரவால்தான் இந்த தொழிலை தொடர முடிவதாகவும் அமித் பதானா கூறினார். அமித் பதானாவிடம் பல வருடங்களாக பால் வாங்கி வரும் வாடிக்கையாளர்கள் அவரது வளர்ச்சியைக் கண்டு வியப்படைகிறார்கள். 13 வருடங்களாக அவரிடம் பால் வாங்கி வரும் வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "முன்பு லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கில் பால் டெலிவரி செய்தார். இப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள Audi காரில் வருகிறார். இதுதான் வித்தியாசம்" என்றார்.
பரீதாபாத்தில், அமித் பதானாவின் ஆடம்பர பால் டெலிவரி சேவை பிரபலமாகிவிட்டது. அவரது Audi காரை பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து செல்கின்றனர்.
இதில் ஒரு சூப்பரான மெசேஜ் இருக்கிறது. பிடித்த வேலையை ரசித்து செய்தால் அதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதே அது.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}