டேனியல் பாலாஜி கண் தானம் செய்ததினால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார்: கமல்ஹாசன்

Mar 30, 2024,05:03 PM IST
சென்னை: தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. கண் தானம் செய்ததினால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார் என நடிகர் கமலஹாசன் தனது டுவிட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி.  இவரது தெனாவெட்டான தோற்றத்தாலும், உடல் மொழியாலும் பலரையும் கவர்ந்தவர். வேட்டையாடு விளையாடு, காக்க காக்க இவ்விரு படத்திலும் இவரது நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. இயல்பான நடிப்பு மற்றும் தனிக்கென ஒரு பானியை பின்பற்றியவர். இது மட்டும் இன்றி பொல்லாதவன், வடசென்னை, பைரவா, பிகில், வடசென்னை 2 போன்ற படங்களிலும் நடித்து வில்லன் நடிகர் என்றால் இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் வளர்ந்தவர்.



இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இவருக்கு வயது 48. நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்துள்ளார். இவரது திடீர் மரணச்செய்தி ரசிகர்கள் மட்டும் இன்றி திரைத்துறை பிலபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த டேனியல் உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,   இவரது மறைவு செய்தியை அறிந்த கமலஹாசன் தனது  டுவிட்டர் பக்கத்தில் டேனியல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்