"எனக்கா End card... யாரு சொன்னா".. நக்கலடித்த டேவிட் வார்னர்.. வந்தாங்க பாருங்க ரசிகர்கள்!

Nov 21, 2023,05:06 PM IST

மெல்போர்ன்: டேவிட் வார்னர் முன்பொரு காலத்தில் ஒரு மார்க்கமாத்தான் இருந்தார்.. ஆனால் எப்ப தெலுங்குப் படம் நிறையப் பார்க்க ஆரம்பிச்சாரோ அப்பவே ஒரு குழந்தைப் பிள்ளையா மாறிட்டாரு.. புட்ட பொம்மா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது,  புஷ்பா ஸ்டைல் காட்டுவது என்று மனுஷன் ஜாலி மோடுக்கு மாறி தனது ஜோலியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை ஒரு கிரிக்கெட் இணையதளம் லைட்டா டென்ஷனாக்கிப் பார்த்துள்ளது.


டேவிட் வார்னர் ஒரு அதிரடி ஓப்பனர். டிப்பிக்கல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன். அவரது பேட்டிங் ஸ்டைலுக்கும், அவரது அதிரடி ரன் குவிப்புக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. வார்னர் கிளிக் ஆகி விட்டால் ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை அந்த ஆஸ்திரேலியாவே நினைத்தாலும் கூட தடுக்க முடியாது. அப்படி ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன்.


முன்பெல்லாம் எதிரணியினரை டீஸ் செய்வது, கலாய்ப்பது, மோதுவது என்று எப்போதும் அனல் கக்கும் கங்கு போல கணன்று கொண்டே இருப்பார் வார்னர். ஆனால் ஐபிஎல்லில் விளையாட ஆரம்பித்தது, இடையில் சில காலம் சஸ்பென்ஷனலில் இருந்தது ஆகிய காரணங்களால் அவரது கேரக்டர் நன்றாகவே மாறிப் போனது. இன்னும் ஜாலியான மனிதராக மாறிப் போனார் டேவிட் வார்னர்.




ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக வலம் வந்த டேவிட் வார்னர், செம ஜாலியாக தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை மாற்ற ஆரம்பித்தார். தெலுங்குப் பட சீன்கள், பாடல்களை வைத்து தனித்தும், குடும்பத்தோடு சேர்ந்தும் ரீல்ஸ் போடுவது, டான்ஸ் ஆடுவது என்று கலக்கி வந்தார். இன்னிக்கு என்ன ரீல்ஸ் போட்டிருக்கார் வார்னர் என்று பார்ப்பதே இந்திய ரசிகர்களின் வேலையாகி விட்டது.. அந்த அளவுக்கு புஷ்பா, பாகுபலியை வைத்தும், புட்டபொம்மாவையும் வைத்து அவர் போடாத ரீல்ஸ் இல்லை.


இந்த நிலையில் நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் வழக்கம் போல சிறப்பாக செயல்பட்டு, அணியின் கோப்பைக் கனவை நனவாக்க தனது பங்கையும் சிறப்பாக அளித்திருந்தார் வார்னர். இறுதிப் போட்டியில் அவர் அதிரடி காட்ட முற்பட்டபோது அட்டகாசமாக அவரது கதையை முடித்து அவுட் ஆக்கினர் இந்திய அணியினர்.


இதுவே இவரது கடைசி உலகக் கோப்பைப் போட்டியாக இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. இதை வைத்து ஒரு கிரிக்கெட் இணையதளம் செய்தி ஒன்றைப் போட்டிருந்தது. அதில்,  Wonderful Warner.. என்ற தலைப்பிலான அந்த கார்டில், டேவிட் வார்னரின் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் சாதனைகள் விவரிக்கப்பட்டுள்ளன.


1527 ரன்கள் குவித்தது, அவரது சராசரி 56.55, ஸ்டிரைக் ரேட் 101.46, அதிகபட்ச ஸ்கோர் 178, 6 சதங்கள், 5 அரை சதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்த அந்த கார்டில், வார்னரின் அருமையான உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்ததா குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ரீபோஸ்ட் செய்துள்ள வார்னர், எல்லாம் சரி, என் கதை முடிஞ்சு போச்சுன்னு யார் சொன்னா என்றும் ஜாலியாக கேட்டுள்ளார்.


"அஸ்திராலயா.. ஆஸ்திரேலியா".. ஆமா, கட்ஜூ நல்லாதானே இருந்தாரு.. ஏன் இப்படி ஆயிட்டாரு??


உடனே திரண்டு வந்த ரசிகர்கள், வார்னருக்கு ஆதரவாக கருத்துக்களைக் குவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பதுதான் ஆச்சரியானது. அதில்   ஒருவர், வார்னர் கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்று விட்டு, நிறைய புட்டபொம்மா, புஷ்பா ரீல்ஸ் போட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் சொல்லியிருப்பாங்க.. கண்டுக்காதீங்க என்று கலாய்த்துள்ளார்.


ஒருவேளை ரிடையர் ஆன பிறகு, தெலுங்குப் படங்களில்  நடிக்க ஆரம்பித்து அல்லு அர்ஜூன் அன் கோவுக்கு அள்ளு தெறிக்க விடுவாரா டேவிட் வார்னர்.. என்ற அபாயகரமான எதிர்பார்ப்பும் சிலருக்கு இருக்கு!

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்