மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக் கான். பாலிவுட்டின் பாட்ஷா, கிங் கான், கிங் ஆஃப் ரொமான்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாகத் திரை துறையில் தோன்றியவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தவர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸ் நல்ல வசூலையும் அள்ளி குவித்துள்ளது. பாலிவுட் திரைப்படங்களில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு இப்படங்கள் வெற்றி பெற்றதால் உலகளவில் ஷாருக்கானின் மதிப்பும் அதிகரித்துள்ளது. நிலவில் இடம் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஷாருக்கானுக்கு தீவிர ரசிகர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்கள் ஆதிகளவில் வந்து கொண்டுள்ளன. இதுகுறித்து போலீஸிலும் ஷாருக் கான் புகார் கொடுத்துள்ளார். ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் அதிகரித்து இருப்பதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அவர் எங்கு சென்றாலும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}