- ஸ்வர்ணலட்சுமி
விசுவாசு வருடம் 2025 டிசம்பர் முதல் நாள் (சோமவாரம்) திங்கட்கிழமை பிறந்துள்ளது. இந்த நாள் சிவபெருமானுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை அமைந்துள்ளது அதீத சிறப்பு. மேலும் இன்று சர்வ ஏகாதசியும்,பீஷ்ம ஏகாதசியும் அமைந்துள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி வரை கார்த்திகை மாதமும், டிசம்பர் 16 ஆம்தேதி முதல் மார்கழி மாதமும்,மழையும் குளிரும் சேர்ந்த வழிபாட்டிற்குரிய சிறப்பான மாதமாகும் இந்த டிசம்பர் மாதம். அனைத்து மதத்தினருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில்நிறைய பண்டிகைகள் அமைந்துள்ளது.
மகர ராசி சிவபெருமானுக்கு கார்த்திகை மகா தீபம் முதல் வாரத்திலேயே அமைந்துள்ளது. மேலும் இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதியும், இஸ்லாமியர்களுக்கு புனிதமான சந்தனக்கூடு திருவிழாவும் பிறந்துள்ள டிசம்பர் மாதத்தில் அமைந்துள்ளது.
டிசம்பர் மாதத்தின் ஆங்கில பெயர் -'December', இலத்தீன் மொழியில் "பத்து " என்று பொருள்படும் 'Decem' என்பதிலிருந்து வந்தது. இது ரோமானிய நாட்காட்டியின் படி பத்தாவது மாதமாக இருந்தது.ஆனால் காலப்போக்கில் 12 வது மாதமாக டிசம்பர் மாதம் மாறியது என்று கூறப்படுகிறது.
டிசம்பர் மாதம் விசேஷ நாட்களும் விரதங்களும் :

டிசம்பர் 1- சர்வ ஏகாதசி பீஷ்ம ஏகாதசி. சுப முகூர்த்த நாள்.
டிசம்பர் 2 - பரணி தீபம். பிரதோஷம்.
டிசம்பர் 3- திருக்கார்த்திகை தீபம்.
டிசம்பர் 4- ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம். கார்த்திகை பௌர்ணமி.
டிசம்பர் 8- சங்கடஹர சதுர்த்தி,தேய்பிறை முகூர்த்த நாள்.
டிசம்பர் 10 - தேய்பிறை முகூர்த்தம், தேய்பிறை சஷ்டி.
டிசம்பர் 14- தேய்பிறை முகூர்த்தம்.
டிசம்பர் 15 -தேய்பிறை முகூர்த்தம். ஏகாதசி விரதம்.
டிசம்பர் 16- மார்கழி 1.
டிசம்பர் 17- பிரதோஷம்.
டிசம்பர் 18 - மாதசிவராத்திரி.
டிசம்பர் 19- அமாவாசை.
டிசம்பர் 23 -திருவோணம்.
டிசம்பர் 24 -கிறிஸ்துமஸ் ஈவ் .
டிசம்பர் 25 -கிறிஸ்துமஸ். சஷ்டி.
டிசம்பர் 30 -வைகுண்ட ஏகாதசி.
டிசம்பர் 31- நியூ இயர் ஈவ். கிருத்திகை.
இந்த டிசம்பர் மாதத்தில் அனைவரும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வோம். மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}