சென்னை: சென்னையில் உள்ள புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைத்து சோதனை அடிப்படையில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று புறநகர் மின்சார ரயில்கள். இதை வைத்து பல புத்தகங்கள் போடலாம்.. அத்தனை அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் அமைதியான தோழன்தான் சென்னை மின்சார ரயில்கள்.
இந்த ரயில்களில் பெரிய அளவில் அடிப்படை வசதிகள் கிடையாது. ஏறலாம், உட்காரலாம், இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிப் போய்க்கலாம். அவ்வளவுதான். கழிப்பறை வசதியோ, ஏசி வசதியோ எதுவும் கிடையாது. இப்போது பஸ்களில் கூட ஏசி பஸ்கள் வந்து விட்டன. ஆனால் இந்த ரயில்கள் மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளன.
இந்த நிலையில், புறநகர் மின்சார ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ரயில்வே நிர்வாகம் ஏற்றுள்ள நிலையில் சோதனை முறையில் ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 அல்லது 3 பெட்டிகளை இணைத்து முதலில் சோதனை முறையில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 6 மாதங்களில் சோதனை ஒட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாக தாம்பரம் டூ சென்னை கடற்கரை வரையிலான புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்தப் பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் பாராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி இருந்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைக்க முடிவு செய்திருப்பது சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இனி கொழுத்தும் சென்னை வெயில் காலத்தை குளுகுளுன்னு கழிக்கும் வாய்ப்பை இந்த ரயில்கள் தரும் என்று நம்பலாம்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}