சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் ஒன்றாவது தெருவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது..
தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த வேகபந்து வீச்சாளர் ஆவார்.இவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதில் 300 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி சாதனை படைத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் போது தனது ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் மட்டும் விளையாடி வருகிறார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா நாளை கோலாகலமாக ஆரம்பிக்க உள்ளது. இதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த 2022 to 24 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நிறுவனமான கேரம் பால் ஈவன்ட் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திக் என்பவர் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது சென்னை மேற்கு மாம்பழத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1வது தெருவிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ராமகிருஷ்ணாபுரம் சாலைக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் அப்பகுதியில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் வீடும் இருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}