சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது சென்னைக்கு அருகே 17ம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நிகர்ந்து வட தமிழகம் - தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதியில், புதுச்சேரிக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ம்தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்கு போவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}