- தீபா ராமானுஜம்
முகம் பாராமலே
மனதை நேசிக்கும் அன்பு
இனியது...
மகிழ்ச்சியாய் சிரிக்கும் தருணங்களில்
ரசிக்கும் அன்பு
அழகானது...
துயர் மிகுந்த வேளையிலே தலை கோதும்
அன்பு
பேரழகானது...

நேசித்த இதயத்தை காயப்படுத்தாத
அன்பு
மிக அழகானது...
உனக்காக நான் என்றும் இருப்பேன் என்று உணர்த்தும்
அன்பு
ஆழமானது...
மௌனத்திலும் மனதைப் புரிந்து கொள்ளும்
உயர்ந்தது...
கவலைகள் போக்க கை கோர்த்து உடன் வரும்
அன்பு
உண்மையானது...
துவண்டு போகும் வேளையிலே தோள் சாய்த்து ஆறுதல் தரும்
அன்பு
அருமையானது...
எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத
அன்பு
நிலையானது...
விழியின் ஒளியாக
இதழின் சிரிப்பாக
மனதின் மகிழ்ச்சியாக
வாழ்வின் வசந்தமாக
வரும் அன்பு என்றும் வரமானது...!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}