சென்னை: தீபாவளி பண்டிகை வருவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு மொத்தம் 14 ஆயிரத்து 086 பேருந்து இயக்கப்படுவதாக சென்னை போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே மகிழ்ச்சிதான். அந்த நன்னாளில் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி பொங்க தீபாவளியை கொண்டாட அனைவரும் விரும்புவது வழக்கம். இதற்காக வெளியூரில் தங்கி படிப்பவர்களும் வேலை பார்ப்பவர்களும் இன்று முதலே சொந்த ஊருக்கு புறப்பட ஆயத்தம் ஆகிவிட்டனர். பொதுமக்கள் பேருந்து நிலையங்களை படையெடுத்து வருகின்றனர்.

அதிகளவில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர டிக்கெட் முன் சேவையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாட இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக முழுவதும் சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் மூன்று நாட்கள் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 700 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 086 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, சிதம்பரம், தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூா், வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி வழியாகவும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக, ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு:
அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்களுக்கு 7845700557, 7845727920, 78457 40924 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவியைத் பெறலாம்.
அரசு பேருந்துகள் குறித்து ஏதேனும் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால் 9445014436 என்ற எண்ணிலும், ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 044 2474900, 26280445, 2628 1611 உள்ளிட்ட எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}