3 நாட்களில் 5.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம்.. பட்டையைக் கிளப்பிய கிளாம்பாக்கம்!

Nov 01, 2024,12:39 PM IST

சென்னை:   தீபாவளிக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட வழக்கமான மற்றும் சிறப்புப் பேருந்துகள் மூலம் 5.25 லட்சம் பேர்  பயணித்துள்ளனர்.


சென்னையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து தற்போது இயங்கி வருகின்றன.




கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டபோது சின்னச் சின்ன குறைகள் இருந்தன. ஆனால் உடனுக்குடன் அவை நிவர்த்தி செய்யப்பட்டதால் தற்போது அந்தப் பேருந்து நிலையம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு பல லட்சம் பயணிகளை சிறப்பாக கையாண்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல சவுகரியமான ஏற்பாடுகளை கிளாம்பாக்கம் பஸ் நிலைம் செய்திருந்தது.


இந்த வருட தீபாவளிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமான 3408 பேருந்துகளுடன் கூடுதலாக 4876 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.  மேலும் பஸ்களை நிறுத்தி வைப்பதர்காக வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கரசங்கால் விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.


அக்டோபர் 28ம் தேதி முதல் இங்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 28ம் தேதி மொத்தம் 1692 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் மூலம் 1.10 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டனர். 29ம் தேதி 3221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2.40 லட்சம் பயணிகள் இதில் பயணம் செய்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர். 30ம் தேதி 3471 பஸ்கள் இயக்கப்பட்டன. 1.75 லட்சம் பயணிகள் பிரயாணம் செய்தனர்.


மொத்தமாக இந்த 3 நாட்களில் 8284 பேருந்துகள் மூலமாக 5.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்