கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க இரவு ஒரு மணி வரை வணிக வளாகங்கள் இயங்கலாம் என கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புது துணி வாங்குவது, பட்டாசு வாங்குவது என பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். தீபாவளி வருவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அலை மோதுகிறது. குறிப்பாக ஜவுளிக்கடைகளிலும் நகைக்கடையிலிலும் கட்டுக்கடங்காத கூட்டம் சாரை சாரையாக வந்து கொண்டே இருக்கிறது.

இதற்கிடையே தானா புயல் எதிரொளியாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஷாப்பிங் மால், ஜவுளி கடை நகைக்கடை போன்ற வணிக வளாகங்கள் முழுவதும் இரவு 10 மணியுடன் முடிவடைகிறது.
இதனால் தீபாவளி பண்டிகைக்காக புத்துணிகள் வாங்குவதில் சிரமப்பட்டு வருகிறது. இது தவிர பகலில் தங்களின் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு மாலை நேரங்களில் கடைவீதிக்கு சென்றால் ஜவுளி கடைகள் விரைவில் மூடப்படுகிறது. டிராபிக், கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் நிதானமாக புது துணிகள் வாங்க முடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க கோவை மாநகர காவல் துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், உள்ளிட்ட பல்வேறு வணிக வளாகங்கள் தீபாவளி வரை கூடுதலாக இரவு ஒரு மணி வரை இயங்கலாம். மேலும் பொதுமக்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொருட்களை சிரமமின்றி வாங்கிக் கொள்ள போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}