Welcome Baby Girl.. தீபிகா படுகோன் - ரன்வீர்.. தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.. தாயும் சேயும் நலம்!

Sep 08, 2024,06:05 PM IST

மும்பை: நடிகை தீபிகா படுகோனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவரது கணவர் ரன்வீர் சிங் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.


2013ம் ஆண்டு கோலியோன் கி ரஸ்லீலா என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் இந்த காதலை படு ரகசியமாகத்தான் வைத்திருந்தனர். கல்யாணம் வரை இந்த ரகசியத்தைக் கட்டிக் காத்தனர். 2018ம் ஆண்டு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் வைத்து இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.




இந்த நிலையில் கர்ப்பமானார் தீபிகா படுகோன். அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தார் ரன்வீர் சிங். கடந்த பிப்ரவரி மாதம்தான் தீபிகா கர்ப்பமாக உள்ள தகவலை வெளியிட்டார் ரன்வீர் சிங். சில நாட்களுக்கு முன்பு தீபிகா படுகோன், மும்பை சித்திவிநாயக் கோவிலுக்கு சாமி கும்பிட தனது குடும்பத்துடன் வந்திருந்தார். இந்த பின்னணியில் நேற்று அவர் மும்பை எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இன்று தீபிகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில் புது வீட்டுக்கு ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியினர் இடம் பெயரவுள்ளனர். புதிய வீட்டில்தான் தங்களது குழந்தையையும் வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த வீடு பந்த்ராவில் உள்ளதாம். பிரமாண்டமான பங்களாவாக இதை கட்டியுள்ளனர். ஷாருக் கானின் வீட்டுக்கு அடுத்து இந்த பங்களா உள்ளது. வீடு தற்போது முழுமை அடையும் நிலையில் உள்ளதாம். அது முடிந்ததும் இந்த வீட்டுக்கு தீபிகா - ரன்வீர் சிங் இடம் பெயருவார்கள். 


2025ம் ஆண்டு முதல் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் தீபிகா படுகோன்.  அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேல் அவர் நடிக்க வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கல்கி 2வது பாகத்தில் அவர் நடிக்க வேண்டியுள்ளது. அந்தப் படத்தில்தான் முதலில் நடிக்கப் போகிறார் தீபிகா படுகோன். அதன் பிறகு ரோஹித் ஷெட்டியின் சிங்கம் அகெய்ன் படத்திலும் அவர் தனது கணவருடன் இணைந்து நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.


பெற்றோர் ஆகியுள்ள தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

சீற்றத்தில் சிஸ்டர் நிர்மலா.. தினந்தோறும் தீ மிதிக்கும் சீதா.. (சீதா - 2)

news

நீள் ஆயுள்.. நிறை செல்வம்.. ஓங்கி வாழும் மெஞ்ஞானம்.. 10 சங்கல்பங்களைக் கைக் கொள்ளுங்கள்!

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

டெல்லியில் முதல் முறையாக செயற்கை மழை...காற்றின் தரத்தை சீராக்க புதிய முயற்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்