ஷாருக்கானுக்கு தீபிகா படுகோன் கொடுத்த முத்தம்.. ஜவானுக்குப் பரிசு!

Sep 17, 2023,02:43 PM IST
மும்பை: ஷாருக் கானுக்கு சூப்பராக ஒரு முத்தம் கொடுத்துள்ளார் தீபிகா படுகோனே.. சினிமாவில் அல்ல.. நிஜத்தில்!

ஜவான் படத்தின் வெற்றி விழாவின்போதுதான் ஷாருக் கானுக்கு இந்த கூல் பரிசைக் கொடுத்து அசத்தியுள்ளார் தீபிகா படுகோனே.

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம்தான் ஜவான். மிகப் பெரிய ஹிட்டாக மாறியுள்ள இந்த படம் இந்தியில் பல வசூல் வரலாறுகளை முறியடித்து அதிரடியைத் தொடர்ந்து கொண்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்துள்ள ஜவான் படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடிக் கொண்டுள்ளது.





இந்த நிலையில் மும்பையில் ஜவான் படத்தின் வெற்றியை அக்குழுவினர் சிறப்பாக கொண்டாடினர். அந்த விழாவுக்குக் கிளம்பிய சமயத்தில்தான் ஷாருக் கானை இறுக்கி அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்துள்ளார் தீபிகா படுகோனே.

ஷாருக் கானின் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களில் தீபிகா படுகோனேவும் ஒருவர். ஓம் சாந்தி ஓம் படத்திலிருந்து இவர்களின் நட்பு தொடங்கியது. அன்று முதல் இன்றுவரை விடாமல் இருவரும் இணைந்து பயணிக்கின்றனர். ஓம் சாந்தி ஓம் படம்தான் தீபிகாவின் முதல் இந்திப் படம் என்பது நினைவிருக்கலாம். அதன் பின்னர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இருவரும் அடித்து விளையாடியிருந்தனர். தொடர்ந்து ஹேப்பி நியூ இயர், பதான் ஆகிய படங்களிலும் இணைந்து நடித்தனர். ஜவான் படத்திலும் கேமியோ ரோல் செய்திருந்தார் தீபிகா.

இந்த நிலையில்  செப்டம்பர் 14ம் தேதி ஜவான் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.  அப்போதுதான் சந்தோஷத்தில் ஷாருக் கானுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் தீபிகா.  இந்த முத்த போட்டோஇப்போது வைரலாகி விட்டது. இந்தப் படத்துக்கு தீபிகாவின் கணவரான நடிகர் ரன்வீர் சிங், ஜவான் படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகளையே கமென்ட்டாக போட்டு கலகலப்பைக் கூட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்