தகர்ந்தது ஆம் ஆத்மி கோட்டை.. டெல்லியைத் தட்டிப் பறித்த பாஜக.. எந்த வாரிசுக்கு முதல்வர் பதவி?

Feb 08, 2025,05:18 PM IST

டெல்லி:   டெல்லியை கடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று தனது கோட்டையாக வைத்திருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது பாஜக. இந்த நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.


டெல்லி சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது பாஜக. இதுவரை டெல்லியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சித் தோல்வியை மக்கள் கொடுத்துள்ளனர். முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைச் சந்தித்துள்ளார். அதேசமயம், கடந்த சில மாதங்களாக முதல்வராக இருந்த அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.


27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சியமைக்கவுள்ளது பாஜக. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல்வர் பதவிக்கு சில தலைவர்களின் பெயர்கள் வலுவாக அடிபடுகின்றன. அதில் முதலிடத்தில் இருப்பவர் பர்வேஷ் வர்மா. 




முன்னாள் டெல்லி முதல்வரான சாஹிப் சிங் வர்மாவின் மகன்தான் பர்வேஷ் வர்மா. முதல் முறை டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தபோது, 2வது முதல்வராகப் பதவி வகித்தவர்தான் சாஹிப் சிங் வர்மா. அவருக்குப் பின்னர் சுஷ்மா சுவராஜ் முதல்வர் பதவியை வகித்தார் என்பது நினைவிருக்கலாம்.


புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட பர்வேஷ் வர்மா, அங்கு போட்டியிட்ட முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலை தோற்கடித்து பாஜக  தலைவர்கள் மத்தியில் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார். மேற்கு டெல்லி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் பர்வேஷ் வர்மா. புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை மட்டுமல்லாமல், மறைந்த முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன சந்தீப் தீட்சித்தையும் சேர்த்து தோற்கடித்துள்ளார் பர்வேஷ் வர்மா. இதனால் இவர்தான் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


பர்வேஷ் வர்மா அதிரடியாக பேசக் கூடியவர். அவரது பல பேச்சுக்கள் சர்ச்சையாகியுள்ளன. முஸ்லீம்கள் சிஏஏ சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மிகப் பெரிய போராட்டம் நடத்தியபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின.  மேலும் முஸ்லீம்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்ததும் சர்ச்சையானது.


அதேபோல  முதல்வர் பதவிக்கு அடிபடும் இன்னொரு பெயர் பன்சூரி ஸ்வராஜ். இவர் மறைந்த சுஷ்மா சுவராஜின் மகள் ஆவார். வழக்கறிஞரான பன்சூரி ஸ்வராஜ், பாஜக இளம் தலைவர்களில் முக்கியமானவர். டெல்லி அரசியலில் இவரும் வளர்ந்து வரும் முக்கியத் தலைவராக இருக்கிறார். டெல்லி பாஜகவின் சட்டப் பிரிவுக்கு இவர்தான் தலைமை தாங்கி வருகிறார். 


ரமேஷ் பிதுரி பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவுதான். காரணம், கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட இவர் தற்போதைய முதல்வர் அதிஷியிடம் தோற்றுப் போய் விட்டார். இதனால் இவருக்கு முதல்வர் பதவிக்கான வாய்ப்பு குறைவுதான். 2 முறை எம்.பியாக இருந்தவர் ரமேஷ் பிதுரி.


இவர்கள் தவிர வீரேந்திர சச்தேவா, துஷ்யந்த் கெளதம், மனோஜ் திவாரி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. இவர்களில் யார் முதல்வராகப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்

news

மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்

news

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!

news

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்