டில்லி : அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக டில்லியில் உள்ள இஸ்லாமிய மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், சிறப்பு தொழுகையும் நடத்தி உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 20) டில்லி நிஜாமுதீன் பசித் பகுதியில் இஸ்லாமியர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நல்ல படியாக நடைபெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்ததுடன், சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது. இந்த விழாவின் மூலம் நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலைக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு இந்து சமூகத்தினர்களுக்கு வாழ்த்துக்களையும் இஸ்லாமிய சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு இந்துக்களுக்கு, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் துணை நிற்கும் என மவுலானா நசீர் அகமது அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் எந்த குழப்பமும் கிடையாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, நடக்க போகும் விழாவிற்கு எங்களின் முழு ஆதரவையும் அளிக்கிறோம் என்றார்.
ஜனவரி 22ம் தேதியும் ராமர் கோவில் திறப்பு வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும் என்றம் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தினரின் இந்த ஒத்துழைப்பிற்கு பாஜக தலைவர் ஷாஜியா இல்மி வரவேற்பு தெரிவித்ததுடன் இது ஒரு நல்ல ஆரம்பம் என்றம் தெரிவித்துள்ளார். அமைதி, வளர்ச்சி, ஒற்றுமைக்காக நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}